தேசிய தமிழ்த் தேனீ போட்டிகள்:

DOWNLOAD HERE
File Name: National_Tamil_Bee_2008
File Type: PDF
File Size: 55.9 KB

அமெரிக்க வாழ் தமிழ் குழந்தைகளின் மொழித் திறனை வளர்க்க,தமிழ் கலை,மொழி பண்பாடு குறித்த அறிவை வளர்க்க நடத்தப்படுவதுதான் தமிழ்த் தேனீ போட்டிகள்.சென்ற ஆண்டு நடந்த போட்டிகளில் பல நகரங்களில் இருந்து,பல தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் ஏராளமான தமிழ் கற்கும் சிறுவர் கலந்து கொண்டு வியக்கத்தக்க வண்ணம் அனைவரையும் மகிழ்வித்தனர். பிற சிறுவர் சிறுமியர்க்கும்,அவர்தம் பெற்றோருக்கும் இது தூண்டுதலாக இருந்தது. அமெரிக்க வேக வாழ்க்கையில் நம் பெருமை மிக்க,ஈடு இணையற்ற சொத்தாகிய தமிழ் மொழியை அடுத்த தலைமுறை பெருமையோடு கற்று,தன்னுடன் எடுத்துச்செல்கிறது என்ற பெரும் உண்மையை உலகுக்கு பறைசாற்றியது. இது தமிழர்களுக்குள் பெரும் வரவேற்பையும் எதிர்பார்பையும் பெற்று வருகிறது.

இதில் மூன்று வகை போட்டிகள் நடைபெறுகிறது.

திருக்குறள் தேனீ - உலகப்பொது மறை/ தமிழ் மறை

திருக்குறள் அறிவு வளர்க்க
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 15 திருக்குறள்
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 25 திருக்குறள்

தமிழ்ப்பேச்சுதேனீ - தமிழ் மேடைப்பேச்சுத் திறனை வளர்க்க
10 ஆம் வகுப்பு வரை

தமிழறிவுத் தேனீ - Jeopardy வடிவில் வினாடி வினா.
10 ஆம் வகுப்பு வரை

தமிழ்/தமிழர் மொழி,இலக்கியம்,வரலாறு,புவியியல்,கலைச்சொல்,புகழ் பெற்றோர்,திரைப்படம்,பாடல்கள் குறித்த அறிவு வளர்க்க சுவையான வினாக்கள் கேட்கப்படும்.